மெட்ரோ ரயில்: ஒரே நாளில் 2 லட்சம் பேர் பயணம்!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 08:05 am
two-lakh-people-travelled-in-chennai-metro-rails-on-monday

சென்னை மெட்ரோ ரயில்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2.1 லட்சம் பேர் பயணம்  செய்துள்ளனர் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை டிஎம்எஸ் -வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையொட்டி, சென்னையில் இயக்கப்படும் அனைத்து மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் திங்கள்கிழமை (நேற்று) இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 2.1 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து ஒரே நாளில் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

newtm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close