மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முகேஷ் அம்பானி!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 08:47 am
mukesh-ambani-met-m-k-stalin-in-his-house

தனது மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷோக்லா மேத்தா ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் நேரில் சந்தித்து தொழிலதிபர் முகேஷ் அம்பானி அழைப்பு விடுத்தார். 

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீத்தா அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. இவருக்கும் வைர வியாபாரியின் மகளான ஷோக்லா மேத்தாவுக்கும் வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் முகேஷ் அம்பானி, நீத்தா அம்பானி ஆகியோர் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை வீட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து தங்களுடைய மகன் திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். 

 

 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close