திருப்பதி லட்டுக்கான நெய் கொள்முதல்: ஆவின் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 08:51 am
approved-with-aavin-company-to-purchase-ghee

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் செய்வதற்கு தேவையான நெய்யை ஆவினில் இருந்து கொள்முதல் செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய பயன்படும் நெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் (சேலம் - ஈரோடு ஒன்றியங்கள்) டெண்டருக்கு விண்ணபித்திருந்தது. 

இந்நிலையில், ஆவின் நிறுவனத்தில் ரூ.23 கோடி  மதிப்பில், 7.24 லட்சம் கிலோ நெய் கொள்முதல் செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்பு 2003 - 2004 ஆம் ஆண்டு ஆவின் நிறுவனம், திருப்பதி தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்தது. தற்போது, 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close