தினசரி கதாநாயகன் சின்ன தம்பி: சட்டப் பேரவையில் அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 11:34 am
daily-hero-chinna-thambi

காட்டு யானை சின்ன தம்பி தினசரி கதாநாயகனாக இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசாமி, சின்ன தம்பி யானை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தினசரி கதாநாயகனாக சின்னதம்பி இருப்பதாகவும், மிருகங்களை துன்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் மிருகங்களிடம் இருந்து மனிதர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மனிதர்களிடம் இருந்து மிருகங்களை காப்பாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். சின்னத்தம்பி குறித்து உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்காக காத்திருப்பதாகவும், தீர்ப்பு வந்தவுடன் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

இதைதொடர்ந்து எம்.எல்.ஏ கார்த்திகேயன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், " தமிழகத்தில் பலவகையான மரக்கன்றுகள் அதிகளவில் நடப்பட்டுள்ளது என்றும், 2011ம் ஆண்டில் 21.76% இருந்த பசுமை போர்வை 2017ம் ஆண்டில் ரூ.23.75% ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை ரூ.3.75 கோடி செலவில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும், மரம் வளர்ப்பு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close