ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் தமிழக முதல்வர்: தமிழிசை பாராட்டு!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 01:29 pm

tamilisai-wishes-cm-edappadi-palanisamy

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் தமிழக முதல்வருக்கு பாராட்டுக்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய நலத்திட்டத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர்; ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் தமிழக முதல்வருக்கு பாராட்டுக்கள்" என தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close