பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடியாது: முதலமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 02:00 pm
andhra-pradesh-can-not-build-a-dam-across-palar

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடியாது என சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டபேரவையில் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது அணைகட்டு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், பாலாறு குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க கோரி கவண ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் பாலாறு நீரை தமிழகத்தில் ஒன்றரை கோடி மக்கள் குடிநீருக்கு பயன்படுத்துவதாகவும், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 5 மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயனடைவதாகவும் தெரிவித்தார். எனவே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் எனவும், பாலாறு நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த ஏதுவாக 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 

இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் பழனிச்சாமி, கடந்த 2006ம் ஆண்டு ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்  தடுப்பணை கட்ட ஆந்திர அரசு முயற்சி செய்த போதே ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாகவும், அதேபோல் ஆந்திர அரசு தடுப்பணை கட்ட கூடாது என தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஆந்திர அரசு பாலாறு குறுக்கே தடுப்பணை கட்ட முடியாது. அதை தமிழக அரசு சட்ட ரீதியாக தடுக்கும் என தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close