தொழிலாளர்களுக்கு ரூ.2000 அறிவிப்பு... சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 03:54 pm
discussion-in-the-fund-for-workers

ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் அறிவிப்பு குறித்து சட்டப்பேரவையில் இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது. 

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.  இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, திமுக உறுப்பினர் பொன்முடி, தொழிலாளர்களுக்கான  பட்ஜெட்  அறிக்கை தேர்தலை கருத்தில் கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கை எனவும் நிஜபட்ஜெட் அல்ல நிழல் பட்ஜெட் எனவும் விமர்சித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய துணை முதல்வர், அதிமுக எப்போதும் தாக்கல் செய்வது நிஜ பட்ஜெட் தான் என்று தெரிவித்தார். நாங்கள் நிஜ பட்ஜெட்டை எப்போதும் தாக்கல் செய்வதால் தான் ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், நிழல் பட்ஜெட்டையே தாக்கல் செய்த நீங்கள் (திமுக) எதிர் வரிசையில் இருக்கிறீர்கள் என்றும் பதில் அளித்தார்.

இதன்பின் பேசிய பொன்முடி, நிழல் பட்ஜெட் இல்லை என்றால் ரூ.2000  நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவித்திருக்கிலாமே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை என்றும் தொழிலாளர்கள், ஏழை குடும்பங்களின் மீது அக்கறை கொண்டே இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது என்றார். அதுமட்டுமின்றி,  இந்த அறிவிப்பு சிறந்ததா இல்லையா என்பதை மட்டும் சொல்லுங்கள் என்றார்.

அதத்கு பதிலளித்த பொன்முடி அறிவிக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் ஆனால் அதை பட்ஜெட்டில் அறிவித்திருக்கலாம். எதற்கு 110ல் அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர், முதல்வருக்கு 110ல் எந்த அறிவிப்பையும் வெளியிட உரிமை உள்ளது என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close