டிக் டாக் தடை செய்யப்பட்டால் முதல் நபராக வரவேற்பேன்: தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 04:11 pm

tamilisai-soundararajan-replied-about-tik-tok-app

டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டால் முதல் நபராக நான் அதை வரவேற்பேன் என  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக கலச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று மனித நேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தமீமும் அன்சாரி கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மணிகண்டன்,  தமிழக கலாச்சாரத்தை சீரழித்து ஆபாசத்துக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் வழிவகுக்கும் டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார். 

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 'டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டால் முதல் நபராக நான் அதை வரவேற்பேன். எங்களை போன்றோர்களை அதில் கிண்டலடிக்கிறார்கள்' என்று தெரிவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close