பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: தேமுதிக-வின் எல்.கே.சுதீஷ்

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 09:16 pm
talk-with-everyone-including-bjp-dmdk

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்

தேமுதிக கொடி அறிமுகப்படுத்தி 19வது ஆண்டை கொண்டாடும் கொடியேற்ற விழாவில், அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ள அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், திரும்பியவுடன் கூட்டணி குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என அவர் கூறினார். இன்னும் 2 வாரங்களில் விஜயகாந்த் திரும்புவார் என்றும், அதன்பிறகு, கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close