நாளையும் சென்னை மெட்ரோ இலவசம்!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 08:59 pm

chennai-metro-will-be-free-tomorrow-too

கடந்த மூன்று நாட்களாக சென்னை மெட்ரோ ரயில், பொதுமக்கள் பயணத்திற்காக முழுவதும் இலவசமாக்கப்பட்ட நிலையில், நான்காவது நாளாக நாளையும் பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா சாலை டிஎம்எஸ்-லிருந்து, வண்ணாரப்பேட்டை வரை செல்லும் மெட்ரோ ரயிலின் கடைசி தடத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிறு அன்று திறந்துவைத்தார். இதையொட்டி, சென்னை மெட்ரோவில் பயணிகள் இரண்டு நாட்களுக்கு இலவசமாக பயணிக்கலாம், என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது. மூன்றாவது நாளாக இன்றும் அது நீட்டிக்கப்பட்ட நிலையில், நாளையும் மெட்ரோவில் சென்னை மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம், என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த செய்தியால், சென்னை மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close