ஓரிரு நாட்களில் பாஜக கூட்டணி அறிவிப்பு: முரளிதர ராவ்

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 06:14 am
will-announce-alliance-soon-muralidhar-rao

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பாரதிய ஜனதா அதிமுக மற்றும் தேமுதிகவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. மூன்று கட்சிகள் தரப்பிலிருந்து கூட்டணி குறித்து இன்னும் உறுதிபட தகவல்கள் வெளியாகாத நிலையில், பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரியில் பாரதிய ஜனதாவின் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ், பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் சிறப்பான கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். கூட்டணி குறித்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் தானே வெளியிட இருப்பதாதகவும் அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close