சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 2 லட்சம் பேர் பயணம்!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 08:56 am
chennai-metro-service-free-today

சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று (பிப்.12) மட்டும் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 2 நாட்களில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

வண்ணாரப்பேட்டை- ஏ.ஜி - டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்று கிழமை(பிப். 10) தொடங்கியது. இதைத்தொடர்ந்து சென்னை மெட்ரோவில் அனைத்து வழித்தடங்களிலும் இரண்டு நாட்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதில் நேற்று(பிப்.12) சென்னை மெட்ரோ ரயிலில் 2,10,792 பேர், நேற்று முன்தினம் (பிப்.11)  பயணம் செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் 4 லட்சத்துக்கும் அதிகமாகவும், கடந்த 4 நாட்களில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். 

பொதுமக்கள் மெட்ரோ ரயிலை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு முறையில் சென்னையில் புதிய மெட்ரோ ரயில் தடம் தொடங்கும் போது அரசு சில நாட்களுக்கு இலவச மெட்ரோ சேவை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ ரயில்களில் 4வது நாளாக இன்றும் மெட்ரோவில் இலவச பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close