அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார் - தமிழிசை பேட்டி

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 09:02 am
tamilisai-press-meet

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நாளை ஈரோட்டிற்கு வர உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்றும். நாளை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஈரோட்டிற்கு வர உள்ளார்.

அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் ஸ்மிரிதி ராணி வரவுள்ளார். அதைத்தொடர்ந்து மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி வருகிறார். பாஜக தலைவர்கள் தமிழகத்திற்கு வருவது மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வலுவாக இருக்கும். தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்து முரளிதரராவ் தான் பதில் கூற வேண்டும்.

ரஃபேல் என்ற ஒரே வார்த்தையை வைத்துக் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார் " என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close