ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 10:42 am
hosur-nagercoil-are-quality-hike-in-corporation

ஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகளை, மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். 

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், நாகர்கோவில் மற்றும் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் நாகர்கோவில், ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்கிறார். 2013ம் ஆண்டு தஞ்சையும், 2014ம் ஆண்டு திண்டுக்கல்லும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், நெகிழி தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கான சட்டமசோதாவும் இன்று சட்டப்பேரவையில் தாக்கலாகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close