ஆங்கிலத்தில் உள்ள தெரு பெயர்களை தமிழில் மாற்ற நடவடிக்கை: அமைச்சர் பாண்டியராஜன்

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 11:51 am
the-move-to-change-the-english-name-in-the-streets

தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட சாலைகள், தெருக்கள், குக்கிராமங்களின் பெயர்களை தமிழில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர் கே.பாண்டியராஜன் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பாண்டியராஜன், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார். 

இதுவரை 5000க்கும் மேற்பட்ட சாலைகள், தெருக்கள், குக்கிராமங்களின் பெயர்களை தமிழில் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது மிகவும் கடினமான பணி எனினும் வருவாய்துறை இப்பணியினை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close