பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 03:32 pm
rs-1-lakh-fine-if-the-plastic-barrier-violates

பிளாஸ்டிக் தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையிலான சட்ட முன்வடிவு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதற்கான சட்ட முன்வடிவு மசோதாவை தாக்கல் செய்தார். அதில், சிறு வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், மளிகை கடை, மருந்து கடைகள் போன்றவைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் ரூ.1000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை சேமித்தல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கு முதல் முறை ரூ. 25 ஆயிரமும், இரண்டாவது முறை ரூ. 50 ஆயிரமும், மூன்றாவது முறை ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும், 3 முறை அபராதம் விதித்த பிறகும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close