பாஜக, பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 01:42 pm
admk-allaiance-discussion-is-going-vaithilingam

அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருவதாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. பாஜக, பாமக, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் பட்சத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். கூட்டணியில் தலைமை எடுக்கும் முடிவு தான் எங்களது முடிவும்" என்றார். 

மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில்  இரட்டை இலை வழக்கு குறித்த கேள்விக்கு, 'வழக்கின் முடிவு எங்களுக்கு சாதகமாக தான் வரும். அதிக சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகள் அதிமுகவிடம் உள்ளன. எனவே இரட்டை இலை எங்களுக்கு தான்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close