ராகு பெயர்ச்சி: நாகநாதசுவாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 02:16 pm
special-pooja-at-naganathaswamy-temple

கும்பகோணம் அருகே உள்ள நாகநாதசுவாமி ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சியையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

நவகிரகங்களில் 'ராகு' க்கான பரிகாரத் தலமாக விளங்குவது கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ஆலயம் ஆகும் . இவ்வாலயத்தின் தென்மேற்கு மூலையில் ராகு பகவான், நாகவல்லி, நாககன்னி என்ற தனது இரு மனைவியருடன் பூரண சரீரத்துடன் மங்கள ராகுவாக அருள்பாலித்து வருகிறார். ராகு பகவான் இவ்வாலய மூலவர் நாகநாதசுவாமி வழிபட்டு  சாப விமோசனம் பெற்றதாக  ஆலய தல புராணங்கள் கூறுகிறது.

இத்தலத்து மூலவர் நாகநாத  சுவாமியை  சூரியன், சந்திரன், பிரம்மா , கார்க்கோடகன், ஆகியோர்  வழிபட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இவ்வாலயத்தை பற்றி அப்பர், திருஞானசம்பந்தர் , சுந்தரர், ஆகிய மூவரும் தங்களது தேவாரத் திருப்பதிகங்களில் பாடியுள்ளனர்.இவ்வாலயத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றாக ராகுபெயர்ச்சி  விளங்குகிறது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராகு பெயர்ச்சி, இன்று  மதியம் 1. 24 மணிக்கு நடைபெற்றது.  ராகு பகவான்  கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார். ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து ராகு பகவானை தரிசனம் செய்தனர். 

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close