கையூட்டு தர மறுத்ததால் கடையை நொறுக்கிய காவல் ஆய்வாளர்.. (வீடியோ இணைப்பு)

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 04:54 pm
police-inspector-break-the-shop

படிப்பு செலவிற்காக தள்ளுவண்டி கடை நடித்தி வரும் மாணவன் கையூட்டு தர மறுத்ததால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் தள்ளுவண்டியை உடைத்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காவல் துறை உங்கள் நண்பன் என கூறினாலும், காவல்துறையில் இருக்கும் ஒரு சிலரால் மொத்த காவல்துறையும் அன்னியமாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் லஞ்சம், கையூட்டு போன்றவை காவல்துறையின் கரையாக உள்ளது.  இது போன்ற கரையால் நிகழ்ந்த சம்பவம் தான் இதுவும். 

சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் நியூ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனது படிப்பு செலவிற்காக இரவு தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இவரிடம், பெரியமேடு காவல் ஆய்வாளர் சிவராஜ் கையூட்டு கேட்டதாக கூறப்படுகிறது.  தர மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் சிவராஜ், அவரது மகனுடன் சேர்ந்து நேற்றிரவு 2 மணியளவில் அப்துல்லின் தள்ளுவண்டி கடையை கல்லால் அடித்து நொறுக்கியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதையடுத்து, காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அப்துல் ரகுமான் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close