தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்குவதற்கு எதிராக வழக்கு!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 03:53 pm
case-filed-against-rs-2000-compensation-for-workers

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000 நிதியுதவி வழங்குவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு நாளை நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய நலத்திட்டத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இம்மாத இறுதிக்குள் ரூ.2,000 அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் நேற்று எதிர்க்கட்சியினர் கேட்ட கேள்விக்கு முதல்வர் பதில் அளித்தார். 

இந்நிலையில் இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close