புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு காவலர்கள் ஆதரவு!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 04:29 pm
police-support-the-criminals-in-the-central-jail

புழல் சிறையில் சிறை கண்காணிப்பாளர் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுவதாக காவல்துறை இயக்குநரிடம் சிறைக் காவலர்கள் புகார் அளித்துள்ளனர். 

புழல் மத்திய சிறையில், பணம் பலம் வாய்ந்த குற்றவாளிகளுக்கு அலைபேசி, கஞ்சா, புகைப்பான் மற்றும் உணவுப்பொருட்களை சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் மற்றும் சிறை அலுவலகர் உதயகுமர் மேற்பார்வையில் வழங்கப்படுவதாகவும், இதற்கு முதல் நிலை காவலர்கள் இசக்கிராஜா, ஆனந்தராஜ், மோகன் மற்றும் கண்ணன் ஆகியோர் உதவியாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஒளிப்பதிவு ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று புழல் மத்திய சிறை 4 மற்றும் 5 பகுதிகளில் முதல்நிலை காவலர் கார்த்திக் ராஜா, செந்தில் குமார் இவர்களும் அலைபேசி, கஞ்சா உள்ளிட்டவற்றை சிறை வாசிகளுக்கு கடத்தி கொடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிறைக்குள் இருந்தவாறே போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் போதை பொருட்களை கடத்த இந்த 6 பேரும் உடந்தையாக இருந்ததாகவும், இசக்கிராஜா மற்றும் கண்ணன் ஆகியோருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி முத்தமிழ் உதவி செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சரக டி.ஐ.ஜி முருகேசனிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் நேர்மையான காவலர்கள் இதனால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை இயக்குநரான தாங்கள் ரகசியமாக விசாரணை மேற்கொண்டால் ஆதாரங்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் சிறைத்துறை காவலர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close