போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இடைநீக்கம் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 05:25 pm
teachers-suspension-is-canceled

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான இடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். 

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், துறை ரீதியான 17 பி நடவடிக்கை தொடரும் என்றும், ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளிலேயே பணியாற்ற மாவட்ட கல்வி அலுவலகர்கள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close