சட்டப்பேரவையில் இன்றைய கார சார விவாதம்..!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 06:08 pm
today-s-debate-in-the-legislative-assembly

சட்டபேரவையில் நிதி அறிக்கையின் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுகவிற்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3 நாட்களாக 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி கூறியதாவது: தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் மக்களுக்கான பிரதிநிதி இல்லாமல் தொகுதி காலியாக உள்ளது. தொகுதி நிலைமையை எண்ணிப் பார்த்து அரசு விரைவில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் தோல்வி பெற்று விடுவோம் என்ற அச்சத்திலேயே அதிமுக அரசு தேர்தலை தள்ளி வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்றார். மேலும் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தவிர அதிமுக அரசுடன் கூட்டணி வைப்பதற்கு வேறு எந்த கட்சியும் தயாராக இல்லை என்றார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்றே வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி மற்றவர் முதுகின் மீது  சவாரி செய்தே தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறினார். 

இதை தொடர்ந்து பேசிய ராமசாமி, தனித்து போட்டியிட தாங்கள் அஞ்சவில்லை. ஜெயலலிதா உள்ள போது நீங்கள் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றீர்கள். இப்போது அவர் இல்லாத நிலையில் நீங்கள் தேர்தலை தனித்து சந்தித்து பாருங்கள் அப்போது உங்கள் நிலைமை என்னவென்று தெரியும் என்றார். மேலும் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததை சுட்டி காட்டிய அவர், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தால், அவர்களுடன் கூட்டணி அமைக்க யாரும் வர மாட்டார்கள் என்றும் கூறினார். 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, நாங்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் செல்வாக்கை பயன்படுத்தியே வெற்றி பெற்றதை ஒப்பு கொள்கிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட முடிவு செய்தால் நாங்களும் தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்திக்க தயார் என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close