சென்னையில் பள்ளி மாணவர்கள் சக மாணவனை தாக்கிய சம்பவம்... பதற வைக்கும் வீடியோ  !

  டேவிட்   | Last Modified : 13 Feb, 2019 08:03 pm
plus-students-attacked-plus-one-student-in-chennai

சென்னை முகப்பேர் தனியார் பள்ளியின் வாசலில் பள்ளி மாணவன் ஒருவனை சக மாணவர்கள் சரமாரியாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பிளஸ்1 மாணவர்களுக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.  இந்தப் பிரச்னையின் உச்சகட்டமாக பிளஸ்-2 மாணவன் ஒருவனை, பிளஸ்-1 மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பள்ளி வளாகத்தின் முன்பே மாணவர் ஒருவரை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தாக்கப்பட்ட மாணவன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தாக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தில் முறையிட்டதன் பேரில்,  இதுதொடர்பாக அந்த பள்ளி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் 3 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close