தமிழகத்தில் 61 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்: டிஜிபி உத்தரவு !

  டேவிட்   | Last Modified : 13 Feb, 2019 09:06 pm
61-dgp-acp-transferred-in-tamilnadu

தமிழகம் முழுவதும் 61 துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.  

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகம் முழுவதும் 61 துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்தி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். கடலூர் பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக அறிவழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.மதுரை குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் வடக்கு சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை கிழக்கு சரக சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.  கோவை நகர சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக சுந்தரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக அவரவர் பணிக்கு சென்று சேர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close