கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: முதலமைச்சர் நாராயணசாமி

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 08:51 am
the-struggle-will-continue-until-the-request-is-fulfilled

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகை முன்பு நேற்று மதியம் தர்ணா போராட்டம் தொடங்கியது. விடிய விடிய நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டுள்ளனார். போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகையை சுற்றி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இன்று காலை ஆளுநர் கிரண்பேடி மாளிகையை விட்டு வெளியே சென்றுவிட்டார். ஆனால், 39 கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும், தனக்கு பயந்து ஆளுநர் வெளியே சென்று விட்டதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close