275 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 10:33 am
new-buses-service-started

தமிழகத்தில் 275 புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில்,  5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக 515 நவீன பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கும் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், ரூ.69 கோடி மதிப்பில் மாற்று திறனாளிகளுக்கான வசதி, ஓட்டுநருக்கு மின் விசிறி, இறங்கும் இடத்தில் ஒலிப்பெருக்கி என நவீன வசதி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 275 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை செயலத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த 275 புதிய பேருந்துகள் சென்னை, விழுப்புரம், கோவை, சேலம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இயக்கப்படவுள்ளன. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close