சாதி, மதம் அற்றவர் என்று அரசிடம் சான்றிதழ் பெற்ற வேலூரைச் சேர்ந்த சினேகாவுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் மனைவி சினேகா. 21 வயதாகும் இவர் எந்த சாதி, மதம் அற்றவர் என்று திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி சான்றிதழ் வழங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி மதம் அற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சினேகா பெற்றார்.
தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே! pic.twitter.com/w1a22F2GRh
இந்நிலையில் சினேகாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே!’ என தெரிவித்துள்ளார்.
newstm.in