கலைஞர் விருது மீண்டும் வழங்கப்படும் - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்!

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 12:32 pm
kalaignar-award-will-be-given-again-minister-k-pandiyarajan-replied-to-mk-stalin

மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கலைஞர் விருது வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு அமைச்சர் கே. பாண்டியராஜன் பதில் அளித்தார். 

இன்று சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செம்மொழி விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.  'தமிழ், செம்மொழி அந்தஸ்து பெற்றது திமுக ஆட்சியில் தான். ஆனால், 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த அதிமுக அரசு தமிழாய்வு நிறுவனத்திற்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. சென்னை தரமணியில் உள்ள தமிழாய்வு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக இயக்குனர் இல்லாமல் இயங்கி வருகிறது. முன்னதாக வழங்கப்பட்ட கலைஞர் விருது தற்போது வழங்கப்படவில்லை' என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஸ்டாலின். 

அதற்கு பதிலளித்த தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், '2011ம் ஆண்டுக்குப் பிறகு தமிழாய்வு நிறுவனத்திற்காக 73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் விருது வழங்கப்படவில்லை என்பது உண்மைதான் ஆனால், அதற்கு தமிழக அரசு காரணம் அல்ல. மத்திய அரசு தான் அந்த விருதை நிறுத்தியது. கலைஞர் விருதை மீண்டும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழாய்வு நிறுவனத்தின் நிரந்தர இயக்குனர் ஒரு மாதத்திற்குள் நியமிக்கப்படுவார். இதுதவிர பெரும்பாக்கத்தில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக தமிழாய்வு நிறுவனம் ஒன்று நிறுவப்பட உள்ளது' என்று தெரிவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close