கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்டோருக்கு மணிமண்டபம்! - முதல்வர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 12:23 pm

cm-announcement-at-tn-assembly-about-leaders-memorial

தமிழ்ப்புலவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விதி 110ன் கீழ் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக அவர் கூறியுள்ளார். அதன்படி, 

►  கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும்.         அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூரில் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். 

►  இரட்டைமலை சீனிவாசனுக்கு மதுராந்தகத்தில் நூலகத்துடன் ஒரு கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும். 

►  பேராசிரியர் முத்தரையருக்கு திருச்சியில் ஒரு கோடி மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.

►  சர் ஏ.டி. பன்னீர்செல்வத்திற்கு திருச்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும். 

►  வி.கே.பழனிசாமிக்கு கோவையில் 1 கோடி ரூபாயில் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம். 

►  ஒண்டி வீரன், தீரன் சுந்தரலிங்கனார் ஆகியோரின் மணிமண்டபம் தலா ரூ.75 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படும். 

►  முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக்கின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். மேலும், ம.போ. சிவஞானம், சி.பா. ஆதித்தனார், வீரன் அழகு முத்துகோன், காளிங்கனார் ஆகியோரின் பிறந்தநாளும் அரசு விழாவாக கொண்டாடப்படும். 

மேற்கண்ட அறிவிப்புகள் விதி  110ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close