கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 01:53 pm
coalition-will-be-announced-on-one-or-two-days

கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போராட்டம் நடத்துவது, தேர்தல் வருவதற்கான அறிகுறி என கூறினார். பாஜக தமிழகத்தை மிக முக்கியமாக நினைப்பதாகவும், மத்திய அரசு பல திட்டங்களைக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர், பாஜக தலைவர் அமித்ஷா வருகை, பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தைத் தரும் என கூறினார்.

கூட்டணிக்காக சில கட்சிகள் தே.மு.தி.க காலில் விழுவதாக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, "விழுந்தவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். ஒரு தூணோடு, இன்னோரு தூண் நின்றால் தான் பலம் பொருந்தியதாக இருக்கும். ஒரு தூணில் இன்னொரு தூண் விழுந்தால், அது பலம் அல்ல. என பதிலளித்தார். 

மேலும், கூட்டணி குறித்த கேள்விக்கு, "பாஜக கட்சிக்கு, கூட்டணியில் யாரோடும் எந்த பிரச்சனையும் கிடையாது. ஓரிரு நாளில் கூட்டணி அறிவிக்கப்படும் "என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close