கோவை குண்டு வெடிப்பின் 21வது ஆண்டு தினம்

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Feb, 2019 02:02 pm
1998-coimbatore-bombings-21st-year


பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் மட்டுமன்றி, கோவை குண்டு வெடிப்பு நாளாகும். கோவையில் கடந்த 1998 ம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர் . மேலும் 200 பேர் காயமடைந்தனர். 

12 வெவ்வேறு இடங்களில் 12 கிமீ சுற்றுவட்டத்தில் மொத்தம் 18 குண்டுகள் வெடிக்கப்பட்டன. 4 குண்டுகள் ஆர். எஸ். புரம் என்ற இடத்திலும், இரண்டு குண்டுகள் பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ஒன்று கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகிலும், மற்றொன்று "உக்கடம்" பகுதியிலும் வெடித்தன. பாஜக தலைவர் எல். கே. அத்வானி உரையாற்றவிருந்த இடத்துக்கு 100 மீட்டர் தூரத்திலேயே முதலாவது குண்டு வெடித்தது.

இக்குண்டுவெடிப்புகளுக்கு அல்-உம்மா என்ற தீவிரவாத அமைப்பு காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அல்உமா இயக்கத்தின் தலைவர் பாஷா கைது செய்யப்பட்டார். கோவையில் தேர்தல் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு காரில் சென்று அங்கிருந்து கோவைக்கு செல்ல அத்வானி திட்டமிட்டிருந்தார்.

ஆனால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த அத்வானியின் கார் பழுதாகி நின்று விட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள அவருக்கு மாற்று கார் உடனடியாக வராததால் அத்வானியின் பயணம் தாமதமானது. இதனால் அவர் கோவை குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அத்வானி கோவை வந்த போது விமான நிலையத்திலிருந்து அவரை பாதுகாப்பு காரணங்களால் அனுமதிக்க அப்போதைய காவல் துறை கண்காணிப்பாளர் மறுத்து விட்டார். இதையடுத்து தன்னுடைய பூனை படை பாதுகாப்பு படையினருடன் அத்வானி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close