தொடரும் தற்கொலை: 15 நாட்களில் 5 காவலர்கள் உயிரிழப்பு!

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 02:02 pm
police-suicide

மதுரையில் சிறப்பு காவல் படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் ராமர் (32). இவர் மதுரை மாநகர் சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வந்த நிலையில், இன்று காலை பணிக்கு வராததால்அவரை பார்க்க காவலர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, ராமர் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருந்ததை கண்ட காவலர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 

விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே, திருச்சியில் சிறப்பு காவலராக பணியாற்றி வந்த முத்து என்பவர் கடந்த 1ம் தேதி இரவு கழுத்தைஅறுத்து தற்கொலை செய்து கொண்டார். தொடர்ச்சியாக சென்னை ஆயுதப்படை காவலர் கடந்த 2ம் தேதி துப்பாக்கியால் சுட்டும், திருச்சி மகளிர் சிறையில் காவலராக பணியாற்றி வந்த செந்தமிழ் செல்வி கடந்த 3ம் தேதி துக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் சென்னை சூளமேடு தலைமை காவலர் வீரவேல் கடந்த 6ம் தேதி தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close