செஞ்சியில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா! -அமைச்சர் உறுதி

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 01:37 pm
minister-udhaykumar-replied-to-chenji-mla-regarding-patta-given-to-transgenders

செஞ்சியில் உள்ள 12 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. எதிர்கட்சியினரின் பல்வேறு கேள்விகளுக்கு ஆளும் தரப்பு அமைச்சர்கள்  பதில் அளித்து வருகின்றனர். மேலும், விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தானின் கோரிக்கைக்கு ஏற்ப, செஞ்சியில் உள்ள 12 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் உறுதி அளித்துள்ளார். 

மேலும், எம்.எல்.ஏ எ.வ.வேலுவின் கேள்விக்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பால் ஒன்றியங்கள் அமைக்கப்படும்" என்று பதில் அளித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close