நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய பாஜக தலைவர் அமித் ஷா சற்றுமுன் ஈரோடு வருகை தந்துள்ளார். அவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டுளளன. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடியைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் வருகை தரவிருக்கின்றனர்.
அந்த வரிசையில் இன்று பாஜக தலைவர் அமித் ஷா சற்றுமுன் ஈரோடு வருகை தந்துள்ளார். அவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இல.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து அவர் ஈரோட்டில் கைத்தறி நெசவாளர்கள் மத்தியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் பாஜகவினருடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.
newstm.in