பட்ஜெட் விவாதம் முடிவுற்றது! சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 03:25 pm
tn-assembly-was-adjourned

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று முடிவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டு முதல் கூட்டம் ஜனவரி 2ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. பின்னர் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஜனவரி 3ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. 8ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உரையுடன் கூட்டம் முடிந்தது. 

அதன் தொடர்ச்சியாக 2019-20ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.  துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக  பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து பிப்ரவரி 11ம் தேதிக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது. 

அதனையடுத்து, அன்றைய தினமே சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி பட்ஜெட் கூட்டம் தொடங்கி கடந்த 4 நாட்களாக பட்ஜெட் மீது, தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி 110ன் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டார். 

தொடர்ந்து இன்று விவாதம் முடிந்து, நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ் இறுதி உரை ஆற்றினார். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை ஒத்தி வைத்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close