2019ல் மீண்டும் மோடி ஆட்சி தான்: ஈரோட்டில் அமித் ஷா பேச்சு!

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 04:02 pm
in-2019-also-modi-government-amit-shah-says-in-erode-bjp-meeting

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று 2019ல் மோடி தலைமையில் தான் மீண்டும் ஆட்சி அமையும் என ஈரோட்டில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் தேசிய பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தேசிய பாஜக தலைவர் அமித் ஷா ஈரோடு வருகை தந்துள்ளார். அவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

இன்று பிற்பகல் சரியாக 2 மணிக்கு ஈரோடு சித்தோடில் விழா நடக்கும் இடத்தின் அருகிலேயே அவரது ஹெலிகாப்டர் வந்திறங்கியது. அங்கிருந்து விழா நடக்கும் இடத்திற்கு அவர் காரில் சென்றார். முதலில் ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட கைத்தறி நெசவாளர்களுடன் உரையாடினார். 

தொடர்ந்து பாஜக பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். அவர் பேசும் போது, "வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மோடி தலைமையில் ஆட்சி அமையும். பாஜக மட்டும் தான் தொண்டர்களை வைத்து ஜெயிக்கும் கட்சி. மற்றவை எல்லாம் தலைவர்களை வைத்து ஜெயிக்கும் கட்சி. 

திமுக - காங்கிரஸ் கூட்டணி 10 ஆண்டுகளில் ஊழல் மட்டுமே செய்தது. முன்னதாக திமுக ஆட்சியில் இருக்கும் போது தமிழகத்திற்கு என்ன செய்தது? திமுக ஒரு குடும்ப அரசியல் கூட்டணி, ஜனநாயக முறைப்படி அமைந்தது அல்ல. 

ஆனால் தமிழகத்திற்கு திமுக செய்யாத பலவற்றை மத்தியில் பாஜக தலைமையிலான அரசு செய்துள்ளது. திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்கு கீழ் வந்துள்ளன. 

மேலும், 2019ம் ஆண்டு பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டம் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது" என தமிழகத்திற்கு பாஜக அரசு செய்த திட்டங்களை விளக்கி அமித் ஷா பேசி வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close