காதல் சண்டையில் கத்தி குத்து: சென்னை ஐ.ஐ.டி.,யில் பயங்கரம்

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 04:33 pm
iit-madras-student-stabs-classmate-in-fight-over-a-female-student

சென்னை ஐ.ஐ.டி.,யில் ஒரே பெண்ணை காதலித்த, இரு மாணவர்கள், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதில், ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவம் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.டெக்., படிக்கும் மனோஜ், 24 அதே வகுப்பை சேர்ந்த மாணவியை காதலித்து வந்தார். அதே வகுப்பில் படிக்கும், பிரமோத்தும் அதே பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக, ஹரியானாவை சேர்ந்த, மனோஜ், பிரமோத் இடையே மாேதல் ஏற்பட்டது. அப்போது, தன் கையில் இருந்த கத்தியால், பிரமோத்தை குத்திய மனோஜ் அங்கிருந்து தப்பிச் சென்றார். 

ரத்த வெள்ளத்தில் மிதந்த, பிரமோத்தை சக மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாயமான மனோஜ்ஜை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், ஐ.ஐ.டி., வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close