காஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்!

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 11:22 am
tn-jawan-died-at-pulwama-attack

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். அவர் தூதுக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீர் புல்வாமா பகுதியில், நேற்று மாலை 78 வாகனங்களில் 2,500க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தூக்குதலுக்கு ஐ.நா.சபையைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் உள்பட கண்டனம் தெரிவித்துள்ளன. புல்வாமா கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது பாகிஸ்தானை மையமாக கொண்ட அமைப்பாகும்.

இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த இருவரும் அடங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என தெரிய வந்துள்ளது. இதனால், அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close