மூன்று நாட்களுக்கு பி.எஸ்.என்.எல். சேவையில் பாதிப்பா...?

  டேவிட்   | Last Modified : 15 Feb, 2019 12:52 pm
bsnl-service-may-vulnerability

4 ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை தங்களுக்கு மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நாடுதழுவிய 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்லப்பா, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்தோடு தங்களுக்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை அளிக்காமல், மத்திய அரசாங்கம் ஒருதலைபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு அளிக்கும் சலுகைகளில் ஒன்றைகூட மத்திய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வழங்கவில்லை என தெரிவித்த அவர், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக தங்களுக்கு சொந்தமான ஒன்றரை லட்சம் கோடி சொத்துக்களைக் கூட வாடகைக்கு விட மத்திய அரசு அனுமதி மறுத்து வருவதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு தங்களின் சேவையை அதிகரிக்கவும் மக்களுக்கு தரமான சேவையை வழங்கவும் தங்களுக்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை வழங்க வேண்டும் எனவும் மக்களுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிடவும் வலியுறுத்தி வரும் பிப்.18 ஆம் தேதி முதல் பி.20 ஆம் தேதி வரை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும், இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதிலும் உள்ள  ஒன்றே முக்கால் லட்சம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தங்களின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு உடனடியாக 4 ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தங்களின் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக பி.எஸ்.என்.எல். சேவையில் பாதிப்பு ஏற்படுக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close