8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் மடிக்கணினி வழங்கப்படும்: அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 08:42 am
this-month-the-laptop-will-be-provided

8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் காசிப்பாளையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "காசிப்பாளையம் பேரூராட்சியில் 300 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், 1.50 லட்சம் மரக்கன்றுகளை நட்டு மாணவர்களே பராமரிக்கும் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைக்கவுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவீத நிதியுதவியுடன் ஸ்மார்ட்  மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இன்னும் ஓராடிற்கு பிறகு தமிழக கல்வித்துறை இந்தியா மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டியாக திகழும் என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close