சி.ஆர்.பி.எஃப் வீரர் சிவசந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா உள்ளிட்டோர் அஞ்சலி!

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 12:52 pm
tribute-to-the-siva-chandran-s-body

திருச்சி விமானநிலையத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர் சிவசந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உள்பட மொத்தம் 38 பேர் வீரமரணம் அடைந்தனர். இத்தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறை சேர்ந்த சிவசுப்பிரமணியன், அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் மற்றும் கேரளா வசந்த குமார், பெங்களூரை சேர்ந்த குரு என 4 பேரின் உடல்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம்  திருச்சி கொண்டுவரப்பட்டது. 

விமானநிலையத்தில் சிவசந்திரன் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஆனந்த்குமார் ஹெக்டே, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து முப்படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் உடல் ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படவுள்ளது. மேலும, சுப்ரமணியன், வசந்தகுமார் ஆகியோரின் உடல்கள் விமானம் மூலம் மதுரை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுப்ரமணியன் உடல் வாகனம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. வசந்த குமார் உடல் விமானம் மூலம் கோழிக்கோடு கொண்டு செல்லப்படுகிறது. திருச்சியில் இருந்து மற்றொரு விமானம் மூலம் வீரர் குரு என்பவரின் உடல் பெங்களூர் எடுத்து செல்லப்படுகிறது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close