புல்வாமா: உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதலமைச்சர் பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 01:09 pm
government-job-for-one-of-the-crpf-soldier-family-members

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா என்ற ஊரில் நேற்று முன்தினம் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உட்பட 38 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்களில் இருந்து தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலில் உயிரிழந்த சிவசுப்பிரமணியன் குடும்பத்திற்கு ஆறுதல் கூற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செல்வார் என தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close