4வது நாளாக தொடரும் போராட்டம்; ஆளுநர் கிரண்பேடியை நீக்கக்கோரி நாராயணசாமி கடிதம்!

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 01:12 pm
puducherry-cm-narayanasamy-continues-his-protest-against-kiranbedi

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை நீக்குமாறு குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சகத்துக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். 

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசிக்கான கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், அமைச்சர்களை ஆலோசிக்காமல் கிரண்பேடி அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட 39 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

தொடர்ந்து இன்று 4வது நாளாக ஆளுநர் மாளிகைக்கு வெளியே முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஆளுநர் கிரண்பேடி, டெல்லிக்கு சென்றுள்ளதாகவும் வருகிற 20ம் தேதி தான் அவர் புதுச்சேரி திரும்புவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close