விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை:  'டிக் டாக்' நிறுவனம் எச்சரிக்கை!

  டேவிட்   | Last Modified : 16 Feb, 2019 03:09 pm
tik-tok-warned-its-customers

வாடிக்கையாளர்கள் விதிமுறைகளை மீறும் பட்சத்தில், அவர்களது கணக்கை முடக்குவது அல்லது வரம்புகளுக்கு உட்பட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என டிக்டாக் நிறுவனம் எச்சரித்துள்ளது. 

டிக் டாக் செயலி கலாச்சாரத்தை சீர்கெடுக்கும் வகையில் இருப்பதாக தமிழக அரசு எச்சரித்ததை அடுத்து, அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”டிக்டோக் மொபைல் செயலிகளை பயன்படுத்துவதில், வாடிக்கையாளர்கள் தங்களுடைய திறமையையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதை ஊக்குவித்து வருகிறோம். எங்களுடைய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும், நலனும் மிக முக்கியம் என்பதால் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். 

அதனால் எந்தவொரு தனி நபருக்கோ அல்லது அவர்களை காயப்படுத்தும் வகையிலோ, எங்களது சமூக விதிமுறைகளை மீறும் எந்தவிதமான செயல்களையும், பதிவுகளையும் பொறுத்துக்கொள்ளமாட்டோடம். விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அந்த பதிவை நீக்குவது அல்லது தேவைப்பட்டால் அவர்களது கணக்கை முடக்குவது அல்லது வரம்புகளுக்கு உட்பட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close