விரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 05:57 pm
tn-jawan-subramanian-s-final-ceremony

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்ரமணியன் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியில் அவர் விவசாய நிலத்தில் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் நடைபெற்ற காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உள்பட மொத்தம் 38 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவச்சந்திரன் உடலுக்கு மத்திய உள்துறை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, சுப்பிரமணியனின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி கொண்டுவரப்பட்டது.

சுப்பிரமணியனின் உடலுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், சுப்ரமணியனின் குடும்பத்தாருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் ஆறுதல் கூறினார். மேலும், தமிழக அரசு அறிவித்த ரூ.20லட்சம் நிதியுதவிக்கான காசோலை, பணி நியமன ஆணையை வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்திலும் ஓபிஎஸ், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியில் அவரது சொந்த விவசாய நிலத்தில் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close