ரஜினியின் அறிக்கையால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை: தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 17 Feb, 2019 05:19 pm
tamilisai-says-about-rajinikanth-s-decision-against-parliament-elections

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற ரஜினியின் அறிக்கையால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர் ரஜினிகாந்த், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளார். 

ரஜினி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறித்து பல்வேறு தலைவர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், "ரஜினியின் அறிக்கை தெளிவான அறிக்கை. ரஜினியின் இந்த அறிக்கையால் பாஜகவுக்கு எந்த பாதிப்பையும் இல்லை. எங்களை பொறுத்தவரை அறிக்கையை நேர்மையாக தான் பார்க்கிறோம். அப்போதே நதிநீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கொடுத்தவர் ரஜினிகாந்த்" என்று தெரிவித்தார்.

மேலும், 'டெல்லி இல்லாமல் தமிழகம் இல்லை; தமிழகம் இல்லாமல் டெல்லி இல்லை' என்ற கமல் கருத்துக்கு வரவேற்பு அளிக்கிறேன் என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close