அதிமுகவுடன் கூட்டணி வைத்து வரலாற்று பிழை செய்துள்ளது பாமக: காங்கிரஸ்

  Newstm Desk   | Last Modified : 19 Feb, 2019 02:13 pm
admk-pmk-alliance-is-historical-mistake-k-s-alagiri

நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் பாமக  கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் சமூக நீதி குறித்து பேசும் பாமக அதிமுகவுடன் சேர்ந்திருப்பது வரலாற்று பிழை என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் பாமக  கூட்டணி பற்றிய தகவல் இன்று வெளியிடப்பட்டது. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். அவர், "அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்திருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதி குறித்து பேசும் பாமக அதிமுகவுடன் சேர்ந்திருக்கிறது. இதன் மூலம் ராமதாஸ் வரலாற்று பிழையை செய்திருக்கிறார். அவர்கள் திமுகவுடன் கூட்டணிக்காக  பேசினார்கள் என்று கூறப்பட்டது. 

காங்கிரஸ்-திமுக கூட்டணி  இன்று மாலை உறுதி செய்யப்படும். எப்படி செயல்படுவோம் என்பது பற்றி நாளை அறிவிக்கப்படும்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close