அதிமுக கூட்டணி குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 01:15 pm
stalin-does-not-deserve-to-speak-about-aiadmk-minister-kadambur-raju

அரசியலில் பக்குவம் இல்லாத தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு அ.தி.மு.க வின் கூட்டணி குறித்து பேச தகுதியில்லை என செய்தி - மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் செய்தி - மக்கள் தொடர்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் மற்றும் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செய்தி - மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க கூட்டணிக்காக எந்த கட்சியையும் நாடவில்லை எனவும் பாமக கூட்டணியை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு எனவும் தெரிவித்தார். 

அரசியலில் பக்குவமில்லாத தி.மு.க தலைவர் ஸ்டாலின் முந்திரிக்கொட்டைத்தனமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கூட்டணி அறிவிப்பதற்கு முன்னரே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு மற்றவர்களை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் 40 தொகுதியிலும் வெற்றி பெறப்போகும் கூட்டணியைத்தான் அ.தி.மு.க அமைத்துள்ளதாகவும், நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறுவோம் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூகூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close