5, 8 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 09:39 am
the-government-did-not-issue-a-public-examination-for-the-5th-8-th-class

5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், "5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கு துறைரீதியாக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான அரசாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பள்ளிகளில் என்னென்ன விளையாட்டுகள் கொண்டு வருவது, உபகரணங்கள் வாங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close